திருப்பத்தூர் – மார்ச் -17,2023
Newz – webteam
“மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு” 1973-2023
தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்டு இன்று 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக. திருப்பத்தூர் மாவட்ட பெண் காவலர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்கள் மென்மேலும் சிறப்பாக பணியாற்றவும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, இன்று திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் ஐம்பதாவது பொன்விழா வாழ்த்து தெரிவித்து ஊக்கப்படுத்தினார்.
மென்மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் அனைத்து பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பெண் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.