நெல்லை மாநகரம் – மார்ச் -02,2023
Newz – webteam
போக்குவரத்து பணிகளுக்கு இடையே பசுமை செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வரும் போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர்
நெல்லை மாநகரம் வண்ணாரப்பேட்டையில் மேம்பாலத் தூண்களில் வைக்கப்பட்ட பசுமை செடிகளை தனது போக்குவரத்து சீர் செய்யும் பணிகளுக்கு இடையே தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வரும் பாளையங்கோட்டை போக்குவரத்து தலைமை காவலர் திரு.சீனிவாசன் HC 1556 அவர்களின் தன்னார்வ சேவைக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில் இன்று நெல்லை மாநகர காவல் ஆணையாளர் . போக்குவரத்து தலைமை காவலரை நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டு தெரிவித்தார்