83.8 F
Tirunelveli
Friday, March 31, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழு துவக்க விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில்‌‌‌ மாவட்ட...

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழு துவக்க விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில்‌‌‌ மாவட்ட எஸ்பி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு…

தூத்துக்குடி – மார்ச் -17,2023

Newz – webteam

தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழு துவக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து போதை பொருள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் மகளிர் கல்லூரியில் இன்று போதை பொருள் தடுப்பு குழு துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து போதைப் பொருள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், தற்போது இளைஞர்கள் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால் அதற்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்து கொள்கின்றனர். அதன்பொருட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இங்கு உருவாக்கப்பட்டுள்ள போதை பொருள் தடுப்பு குழுவினராகிய நீங்கள் உங்கள் உறவினர்கள், உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் போதை பொருள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கஞ்சா போன்ற போதை பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக பொதுமக்கள் தகவல் தருவதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செல்போன் எண்ணான 83000 14567 என்ற எண்ணிற்கும் நீங்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும். நாம் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சில கட்டுபாடுகள் நமக்கு அவசியம். விளையாட்டுகளுக்கு எப்படி விதிமுறைகள், எல்லைகள் மற்றும் வெற்றி இலக்குகள் உள்ளதோ அதே போன்றும் வாழ்க்கையிலும் உங்களுக்கென்று கட்டுபாடுகளை உருவாக்கி கொண்டு உங்கள் இலக்குகளை அடைய வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனமும் ஆரோக்கியமாக இருக்கும். தங்களிடம் இருப்பதை வைத்து வாழ பழகிகொண்டாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், எண்ணமே வாழ்க்கை. கோபத்தினால் ஒருவன் குற்ற செயலில் ஈடுபட்டு சிறை செல்வதைவிட தன்னை கட்டுபடுத்தி பிறரிடம் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பவன்தான் உண்மையான வீரன்.

மேலும் டாக்டர் அப்துல் கலாம் கூறியதுபோல் ‘ கனவு காணுங்கள்” என்பதற்கிணங்க நாம் என்னவாக இருக்க ஆசைப்படுகிறோமோ அதன்படி நல்ல எண்ணங்களை உருவாக்கி கொண்டு அதற்காக உழைக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்பதை நிறுத்த கூடாது. தேவையில்லாத அகங்காரம், தற்பெருமை, கோபம் போன்றவற்றை தூக்கி எறியுங்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள், வாழ்க்கையில் வெற்றியாளராக இருக்க முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கையில் உங்கள் லட்சியம் மிக உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்றும்,

மேலும் போதை பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகளை குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

அதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாணவிகள் அனைவரும் போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் வான்மதி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சசிரேகாமணி மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் காமராஜ் மகளிர் கல்லூரி தாளாளர் திரு. முத்துசெல்வம், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்