திருப்பத்தூர் – மார்ச் – 11,2023
Newz – webteam
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் திருப்பத்தூர் கிராமியக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ப.முத்தம்பட்டி கிராமத்தின் முக்கிய இடங்களில் மற்றும் சாலை சந்திப்புகளில் குற்றங்களை தடுக்கவும் விபத்துக்களை குறைக்கவும் பொதுமக்கள் உதவியுடன் ரூபாய் 1,50,000 மதிப்புள்ள அதி நவீன 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, இன்று திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடவாமல் தடுக்க, கண்காணிக்க, விபத்துக்களை குறைக்க தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டுகோள் விடுத்தார்.