கன்னியாகுமரி – மார்ச் -18,2023
Newz – webteam
காவலர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட காவல்துறை இயக்குனர் அவர்கள். கன்னியாகுமரி காவல் நிலையம் ஆய்வு. சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர்.செ.சைலேந்திரபாபு, இ. கா.ப., இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை களைய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
அதன்பிறகு, கன்னியாகுமரி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்திலும், அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காவல் நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்து, புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்து அவர்களின் குறைகளை களைய நடவெடிக்கை எடுக்க வேண்டுமென்றும்
காவல் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
மேலும், சிறப்பாக செயல்பட்டு குற்ற நடவடிக்கைகள் நடவாமல் தடுத்த காவலர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.
காவலர்களுக்கு முறையாக வாராந்திர ஓய்வு வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார். பின்பு காவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.