இராணிப்பேட்டை – மார்ச் -06,2023
Newz – webteam
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் .மங்கையர்கரசி (திமிரி காவல் நிலையம்) , . சாலமன் ராஜா (அரக்கோணம் நகர காவல் நிலையம்), ஆகியோரை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஷ்ருதி, இ.கா.ப., பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார்
மேலும் இக்குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.விசுவேசுவரய்யா (தலைமையிடம்) மற்றும் முத்துகருப்பன் (இணையவழி குற்றப்பிரிவு), உதவி காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் இ.கா.ப., அரக்கோணம் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு இராணிப்பேட்டை உட்கோட்டம் ரவிச்சந்திரன் மாவட்ட குற்றப்பிரிவு , கோட்டீஸ்வரன் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு) ,இராஜாசுந்தர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்