திருப்பத்தூர் – மார்ச் – 18,2023
Newz – webteam
ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். M.S. முத்துசாமி IPS.,தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் முன்னிலையில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களும், காவல் ஆய்வாளர்களும், உதவி ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆளிநர்களுக்கும், திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலருக்கும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் பரிந்துரையின்படி வேலுர் சரக காவல் துறை துணைதலைவர் முனைவர்.M.S.முத்துசாமி IPS., பாராட்டு சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.