அரியலூர் – மார்ச் -01,2023
Newz – webteam
அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி காவல் துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை பேணும் வகையிலும், இளைஞர்களிடையே விளையாட்டு மேம்பாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே கையுந்து விளையாட்டு போட்டி அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் , காவல்துறை அணி என 35 அணிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.
இறுதியாக முதல் நான்கு இடங்கள் வெற்றி பெற்ற அணிக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா வெற்றி கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியின் போது அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.ரவிசேகரன் P.மணவாளன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கையுந்து பந்து அசோசியேஷன் நிர்வாக தலைவர் பொன்மணி மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முதலிடம்: இடையக்குறிச்சி அணி ,இரண்டாம் இடம் வளவெட்டி குப்பம், மூன்றாம் இடம் : எம் ஆர் சி கல்லூரி மாணவர்கள் அணி, நான்காம் இடம் இலையூர்
உடன் ஆயுதப்படை ஆய்வாளர் .A.பத்மநாபன் , ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இருந்தனர்