சென்னை ஆவடி – மார்ச் -08,2023
Newz – webteam
ஆவடி காவல் ஆணையரக சர்வதேச மகளிர் தினம் இன்று கடைபிடிக்க பட்டு வருவதால் ஆவடி
காவல் ஆணையரகத்தில் அமைந்துள்ள எஸ்.எம்.நகர் தமிழ்நாடு காவல்துறை திருமண மண்டபத்தில் சர்வதேசமகளிர்தின விழாகொண்டாடபட்டது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல், இந்திய காவல் பணி அதிகாரிகளின் மனைவிகள் சங்கம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
சோபியாசைலேந்திரபாபு தலைவி தலைமை விருந்தினராக வருகை புரிந்தார், ஷில்பம் கபூர் ரத்தோர், செயலாளர் IPSOWA) அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி காவல் அணையரக உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பெண் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பங்களுக்கு அப்பல்லோ மருத்துவமனை IPSOWA உடன் இணைந்து “சுகாதார பரிசோதனைதிட்டத்தை நடத்தினர்.
ரங்கோலி போட்டி, சிலம்பம், சைலண்ட்டிரில் ஸ்கில் ஷோமற்றும் பிரபலகலைஞர்திரு.வி.வி.பிரசன்னாமற்றும் திரைஇசை பின்னனி
பாடகர்கள் சிவங்கி, கிருஷ்ண குமார் அவர்களின் இசை நிகழ்ச்சி
உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 07.03.2023 அன்று சிறப்பு விரிவுரையாளராக உஷா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு “பணி வாழ்வு சமநிலை”என்ற தலைப்பில் ஆவடி காவல் ஆணையரகத்தின் பெண் காவலர்களுக்கான நல்வாழ்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது குறிப்பிடதக்கது