திருப்பத்தூர் – மார்ச் -02,2023
Newz – webteam
இரவு ரோந்து பணியின் போது துரிதமாக செயல்பட்டு, TN 23 BW 6477 போர்ட் காரில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் ரூபாய் 88,500/- மதிப்புள்ள 30 பெட்டிகள் கொண்ட 2880 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை காருடன் பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பான செயல் செய்த முதல் நிலை காவலர் பிரபாகரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டி, மேலும் பணியை சிறப்பாக செய்ய அறிவுரைகள் வழங்கி ஊக்குவித்தார்.