திருச்சி – மார்ச் -02,2023
Newz – webteam
திருச்சி மாநகரில் பணிபுரியும் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு பழச்சாறு மற்றும் குளிர்பானம் வழங்கும் திட்டத்தை திருச்சி மாநகர காவல்
ஆணையர் தொடங்கி வைத்தார்
திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்பிரியா,இ.கா.ப., எதிர்வரும் கோடை காலங்களில் திருச்சி மாநகர காவல் ஆளிநர்களின் உடல்நலம், ஆரோக்கியத்தை காத்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்
அதன்படி, இன்று தஞ்சாவூர் ரோடு பால்பண்ணை ஜங்சனில் உள்ள போக்குவரத்து சந்திப்பில் பணிபுரியும் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் கோடை காலங்களில் பணிபுரியும் போது சேர்வடையாமலும், புத்துணர்ச்சியுடன் பணிபுரியும் வகையில் பழச்சாறு மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சியை திருச்சி மாநகர காவல் ஆணையர் தொடங்கிவைத்தார் .மேலும் கோடைகாலங்களில் போக்குவரத்து காவல் ஆளிநர்களின் தங்களது உடல்நலனை பேணிக்காத்திட பேணிக்காத்திட அறிவுரைகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு,
போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டார். மேலும் கோடை காலம் முழுவதும் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு பழச்சாறு மற்றும் குளிர்பானம் தொடர்ந்து வழங்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துக்கொண்டார்