நெல்லை மாநகரம் – மார்ச் – 03,2023
Newz – webteam
போக்குவரத்து விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை செலுத்த சிறப்பு சேவை மையத்தை துவக்கி வைத்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர்
போக்குவரத்து விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை பொதுமக்கள் சேவை கட்டணமின்றி எளிதாக கட்டுவதற்கு வசதியாக,சந்திப்பு போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் பாளையம்கோட்டை போக்குவரத்து காவல் நிலையம் ஆகிய இரு இடங்களில் போக்குவரத்து சேவை மையத்தை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்கள். மேலும் இச்சேவை மையம் தினமும் காலை 09 மணி முதல் இரவு 08 மணி வரை செயல்படும் என நெல்லை மாநகர காவல் துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. உடன் இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையாளர்கள் மேற்கு மற்றும் தலைமையிடம் அவர்கள், மற்றும் காவல் உதவி ஆணையாளர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்
குறிப்பு: பணமில்லா பரிவர்த்தனை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Credit Card, Debit Card, UPI, QR Code இந்த வகைகளில் மூலம் அபராத தொகையை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது