சென்னை ஆவடி -மார்ச் – 04,2023
Newz – webteam
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 01.01.2022 அன்று ஆவடி காவல் ஆணையரகம் உதயமானது. சென்னை மாநகர காவல்துறையால் 3 (மூன்று) துப்பறியும் மோப்ப நாய்கள் வழங்கப்பட்டு ஆவடி காவல் ஆணையரகத்தின் துப்பறியும் மோப்ப நாய்கள் படைபிரிவு தொடங்கப்பட்டது, வெடிகுண்டு கண்டறிதலில் 2 (இரண்டு) மோப்ப நாய்கள் நிபுணத்துவம் பெற்றும் மற்றுமொரு துப்பறியும் மோப்ப நாய் குற்ற வழக்குகளில் தடயங்களை கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்றும் விளங்குகிறது.
09.05.2022-ல் துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் இரண்டு (2) மோப்ப நாய்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் 10.12.2022 அன்று உடல்நல குறைவு காரணமாக டோனி என்ற துப்பறியும் மோப்ப நாய் காலமாகிவிட்டது. இன்று 04.03.2023-ம் தேதி 4 மாதங்கள் வயதுடைய (டாபர்மேன்) நாய், துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த டாபர்மேனுக்கு “கிகி” என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போதைய துப்பறியும் மோப்ப நாய் படைபிரிவில் 5 (ஐந்து) மோப்ப நாய்கள் உள்ளன. இவற்றில் 3(மூன்று) டாபர்மேன், 2 (லாப்ரடோர்) மோப்ப நாய்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த வருடத்தில், இதுவரை 29 குற்ற வழக்குகளிலும், 14 கொள்ளை வழக்குகளிலும், எதிரிகளை கண்டறிந்தும் (VVP) முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணியிலும், நாசவேலை தடுப்பு சோதனையிலும், சிறப்பாக பணியாற்றிவருவது குறிப்பிடதக்கது.