சென்னை ஆவடி – பிப் -18,2023
Newz – webteam
புகார்தாரர்.சைலேஷ் ஆ/வ/31, த/பெ. வைரக்கண்ணு, எண்.100, மணியம் அரூர் மாரியம்மன் கோவில் தெரு, கடலுர் மாவட்டம் மற்றும் 49 நபர்கள் சேர்ந்து வெளிநாடு செல்ல எதிரி மினாஹஜீதின் 40, த/பெ. இம்தாத், எண்-95/92, 9வது தெரு, காமராஜ் நகர், ஆவடி, சென்னை-54. என்பவர் அலுவலகம் எண்.3, ராஜீவ் காந்தி நகர், சேக்காடு, சி.டி.எச்.சாலை, ஆவடி என்ற முகவரியில் Alfattah Tours and Travels என்ற கம்பெனியில் Facebook-ல் வெளிநாட்டில் வேலை வாங்கி தரப்படும் என்ற விளம்பரத்தை பார்த்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மொத்தம் 50 நபர்கள் (ரூ.90.00.000) தொண்ணுறு லட்சத்திற்க்கும் மேலாக பணத்தை கொடுத்ததாகவும் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றுவதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது மேலும் சென்னை ஆவடியை சார்ந்த மீரான் என்ற சேக்மீரான் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அல்பத்தாஹ் டிராவல்ஸ் உரிமையாளர் மீது ரஷ்யாவில் வேலை வாங்கி்தருவதாக கூறி அவரிடம் 8,லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார் அந்த புகாரின் மீது ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற பிரிவில் (JOB RACKET)வேலை வாய்ப்பு மோசடி பிரிவில் ஆய்வாளர் கீதா வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டார்.
சந்தீப் ராய் ரத்தோர். இ.கா.ப., காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகம் அவர்களின் உத்தரவுப்படி எதிரி மினாஹஜீதின் கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவர்-1, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்றகாவலுக்கு உட்படுத்தப்பட்டார்.