திருப்பத்தூர் – பிப் -11,2023
Newz – webteam
திருப்பத்தூர் மாவட்ட காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
இன்று திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறைக்கு வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள அனைத்து இரண்டு, நான்கு மற்றும் கனரக வாகனங்கள், சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். K.S பாலகிருஷ்ணன்..,BVSc ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கி, வாகன ஓட்டுனர்கள் மற்றும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டார். மேலும் வாராந்திர கவாத்து பயிற்சி, படைக்கலன் மற்றும் பல்பொருள் அங்காடியை (Canteen) பார்வையிட்டார்
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட தனிப் பிரிவு ஆய்வாளர் ரஜினி குமார், ஆயுதப்படை ஆய்வாளர் கஸ்தூரி, வாகன பிரிவு ஆய்வாளர் சரண்யா ஆகியோர் உடன் இருந்தனர்.