நெல்லை – பிப் -22,2023
Newz – webteam
உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு உதவி கரம் நீட்டிய 1999ம் ஆண்டு காவல் துறை நண்பர்கள்.
நெல்லை மாநகர காவல் துறையில் பணியாற்றி கடந்த 01-01-2023ம் தேதியன்று சாலை விபத்தில் உயிரிழந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் தமிழ்நாடு முழுவதும் 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவல் துறை நண்பர்கள் 2746 நபர்கள் ஒன்றிணைந்து ரூ.14,11,000 பணத்திற்கான காசோலை மற்றும் பணத்தை இன்று, 40வது உதவி தொகையாக நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் வழங்கினார்