திருச்சி – பிப் -15,2023
Newz – webteam
15 ஆண்டு அப்பழுக்கற்ற பணி செய்தமைக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கம் பெற்ற காவல் ஆளிநர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் .M.சத்தியப்பிரியா,
இ.கா.ப., திருச்சி மாநகர காவல் ஆளிநர்களின் 15 ஆார்டுகள் சிறப்பான பணியை பாராட்டும் வகையில் முதலைமச்சரின் காவலர் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இச்சிறப்பான பதக்கம் பெற்ற நபர்களை கௌரவிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் 5 சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் 55
தலைமை காவலர்கள் என முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்ற மொத்தம் 61
காவல் ஆளிநர்களை இன்று நேரில் அழைத்து பாராட்டு
சான்றிதழ் வழங்கினார்.
இச்சான்றினை வழங்கி உரையாடிய காவல் ஆணையர் அவர்கள் முதலமைச்சர் காவலர் பதக்கம் பெற்ற காவல் ஆளிநர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தும். மேலும் எதிர்வரும் காலங்களில் அவர்களது பணி மென்மேலும் சிறப்புடன் செய்து திருச்சி மாநகர பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்தும், தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல் ஆளிநர்கள் நடந்து கொள்ளும்படி தக்க அறிவுரை வழங்கினார்
திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்டநடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றவாளிகள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய, சட்டரீதியான, கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவிக்கிறார்