நெல்லை மாநகரம் – பிப் -09,2023
Newz – webteam
சாலையில் கீழே கிடந்த பணத்தை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை வெகுமதி அளித்து பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள்.
நெல்லை மாநகரம் பாளையம்கோட்டை பகுதியில் தனியார் உணவு டெலிவரி செய்யும் திரு.வினோத் என்பவர் 09-02-2023ம் தேதியன்று சாலையில் கீழே கிடந்த சுமார் ரூபாய் 46,000 பணத்தை பாளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரின் நேர்மையை பாராட்டி, வெகுமதி அளித்து கௌரவித்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர்
குறிப்பு : தவற விட்ட நபர்கள் உரிய ஆவணங்களுடன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தை அணுகுமாறு நெல்லை மாநகர காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.