திருச்சி – பிப் -06,2023
Newz – webteam
திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் தேநீர் அங்காடியை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தொடங்கி வைத்தார்
திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்பிரியா,இ.கா.ப., திருச்சி மாநகர பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திருச்சி மாநகர காவல் ஆளிநர்களின் நலன் காத்திட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள காவல் துணை ஆணையர்கள், தெற்கு, வடக்கு மற்றும் தலைமையிடம், காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
திருச்சி மாநகர ஆயுதப்படையில் காவல் ஆளிநர்கள் புத்துணர்வு பெரும் வகையில் ஆயுதப்படை வளாகத்தில் புதியதாக தொடங்கபட்ட தேநீர் அங்காடியை திருச்சி மாநகர காவல் ஆணையர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்
இந்த தேநீர் அங்காடி திறப்பு விழாவில் காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தலைமையிடம், கூடுதல் காவல் ஆணையர் மாநகர ஆயுதப்படை, காவல் உதவி ஆணையர் கே.கே.நகர் சரகம் ஆகியோர் கலந்து கொண்டார்.