நெல்லை மாநகரம் – பிப் -05,2023
Newz – webteam
நெல்லை மாநகர ஆயுதப்படையில் வருடாந்திர நினைவூட்டும் கவாத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெல்லை மாநகர காவல் ஆணையாளர்
திருநெல்வேலி ஆயுதப்படை வளாகத்தில் இன்று வருடாந்திர கவாத்து (Demobilization parade) அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் , காவல் துணை ஆணையாளர்கள் கிழக்கு, மேற்கு மற்றும் தலைமையிடம் ஆகியோர் கலந்துகொண்டனர். உடன் காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.மாநகர காவல் ஆணையாளர் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் டேனியல் கிருபாகரன் முன்னிலை வகித்து வழிநடத்தி வந்த காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்