கன்னியாகுமரி – பிப் – 09,2023
Newz – webteam
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கிரிக்கெட் அணிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டம், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கிரிக்கெட், கபாடி,கைப்பந்து மற்றும் அத்லடிக்ஸ் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு காவல்துறையினர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் இன்று சுங்கான்கடை அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கிரிக்கெட் அணிக்கு அடங்கிய இரண்டு விளையாட்டு உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . D. N. ஹரி கிரன் பிரசாத் IPS வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், குளச்சல் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தங்கராமன், தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கிரிக்கெட் அணியினரும் கலந்து கொண்டனர்.