நெல்லை மாநகரம் – பிப் -06,2023
Newz – webteam
நெல்லை மாநகரம் பாளை தூய சவேரியர் கல்லூரி மைதானத்தில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் துணை ஆணையாளர் தலைமையிடம் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான பெண் விண்ணப்பதாரர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2022ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 27.11.2022ம் தேதியன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்று தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் 300 பேருக்கு உடல் தகுதி தேர்வு இன்று (06.02.2023) திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் துணை ஆணையாளர் தலைமையிடம் ஆகியோர் தலைமையில் பாளை தூய சவேரியர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நாளை (07.02.2023) 244 விண்ணப்பதாரர்களும், மொத்தம் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 544 பெண் விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த உடற்தகுதி தேர்வுப் பணியில் காவல் ஆணையாளர் தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.