கோயம்புத்தூர் – பிப் -20,2023
Newz – webteam
கோவையில் நேரடி காவல் உதவி ஆய்வாளராக தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியாமான ஆணையை வழங்கிய கோவைச் சரக காவல்துறை துணைத் தலைவர்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்ததால் 2022- ம் நடத்தப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 5 நபர்கள் வெற்றி பெற்று காவல் உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான 5 நபர்களுக்கும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார், இ.கா.ப., அவர்கள் இன்று கோவை சரக காவல் அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணையை வழங்கி அவரது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., காவல் உதவி ஆய்வாளராக தேர்வு பெற்ற 5 நபர்களையும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.