கன்னியாகுமரி – பிப் -27,2023
Newz – webteam
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்தாட்ட போட்டி. முதல் பரிசு வென்ற கன்னியாகுமரி பாலிடெக்னிக் அணியை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நாமக்கல் மாவட்டத்தில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வந்தது.
இதில் கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியை சேர்ந்த மார்னிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதல் பரிசை வென்றது.
முதல் பரிசை வென்ற மார்னிங் ஸ்டார் பாலிடெக்னிக் அணி இன்று 27.02.2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .D.N.ஹரி கிரன் பிரசாத் IPS சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.