83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி ஈமு கோழி மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றகொடுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சான்றிதழ்...

ஈமு கோழி மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றகொடுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

தூத்துக்குடி – பிப் -23,2023

Newz – webteam

ஈமு மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்று தந்த புலன்விசாரணை அதிகாரி மற்றும் காவலர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் பாராட்டு.

ஈரோடு பெருந்துறை, குயின் ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனமானது பொதுமக்களிடம் ஈமு கோழிகள் மீது முதலீடு செய்யும் பணத்திற்கு அதிகமான தொகைதிரும்ப கிடைக்கும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, பல முதலீட்டாளர்களுக்கு திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளது.

இது சம்பந்தமாக கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் 2012 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவையில் 306 முதலீட்டாளர்களிடம் ரூ.5,65,83,840/- மற்றும் ஈரோட்டில் 829 முதலீட்டாளர்களிடம் ரூ.26,58,32,570/- ஏமாற்றப்பட்டதற்காக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருவழக்குகளிலும் 18.02.2023 அன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேற்படி தீர்ப்பில் இரண்டு வழக்குகளிலும் எதிரிகள் மயில்சாமி மற்றும் சக்திவேல் இருவருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கோயம்புத்தூர் வழக்கில் ரூ.5,68,48,000/- அபராதமும், ஈரோடு வழக்கில் ரூ.28,72,32,000/- அபராதமும் வழங்கப்பட்டது. அபராதத் தொகைகளை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட உள்ளது.

இவ்வழக்கை திறம்பட விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பை மீட்டுத் தந்த காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்ட காவல் அலுவலர்களை DGP அலுவலகத்திற்கு நேரில் அழைத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரா பாபு, இ.கா.ப பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்