சென்னை – பிப் -08,2023
Newz – webteam
பழங்கால சிலைகளை மீட்ட சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களை பாராட்டி பண வெகுமதி வழங்கிய டிஜிபி அவர்கள்
கடந்த 10.01.2023 அன்று சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ஷோபா துரைராஜன் என்பவரிடமிருந்து சுமார் 400 வருட பழமை வாய்ந்த பல கோடி மதிப்புள்ள 10 பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. பழமை வாய்ந்த சிலைகளை மீட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை காவலர்களை இன்று டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்