அரியலூர் – பிப் -17,2023
Newz – webteam
தமிழக முதல்வர் கோப்பை போட்டியில் மாவட்ட அளவில் அரசு ஊழியர்களுக்கான போட்டியில் வென்ற காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்கள்.
அரியலூர் மாவட்டம்,மாவட்ட விளையாட்டு அரங்கில் 16.02.2023 நேற்று “தமிழக முதல்வர் கோப்பை” அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்காவல்துறையினர் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டி பிரிவுகளில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற ஆயுதப்படை காவல் ஆளிநர்களை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .கா.பெரோஸ்கான் அப்துல்லா நேரில் அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்தார்கள். உடன் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் .பத்மநாபன் அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் .சுரேஷ் இருந்தனர். 100 மீட்டர் ஓட்டத்தில் காவலர் இளஞ்செழியன் முதலிடம் வென்றார், தூரம் தாண்டுதலில் காவலர் பாலாஜி முதலிடம் வென்றார், கைப்பந்து போட்டியில் காவலர் குரு அவரின் தலைமையிலான அணி முதலிடம் வென்றது . பெண் தலைமை காவலர் மகாலட்சுமி பேட்மிட்டன் போட்டியில் முதலிடம் வென்றார். பெண்களுக்கான 1500 மீட்டர் மற்றும் தூரம் தாண்டுதலில் காவலர் சுகன்யா முதலிடம் வென்றார்.மேலும் ஆடவர் கபடி போட்டியில் முதல் மற்றும் மூன்றாம் இடத்தை என இரண்டு காவல் அணிகள் வென்றனர்.