திருப்பத்தூர் – பிப் -06,2023
Newz – webteam
பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம்
வடக்கு மண்டல காவல்துறை தலைவர் முனைவர் N.கண்ணன்.,IPS உத்தரவின் பேரில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.M.S முத்துசாமி.,IPS அவர்களின் அறிவுறுத்தலின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S. பாலகிருஷ்ணன்.,BVSc, வழிகாட்டுதலின் படி பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம் (SAFE SURFING AWARENESS WEEK) இன்று 06.02.2023ம் தேதி முதல் 10.02.2023ம் தேதி வரை கடைபிடிக்கப்பட உள்ளது.
இதில் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இன்று 06.02.2023 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் மற்றும் ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையில் St.Charles மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர்கள் மற்றும் சுமார் 900 மாணவர்களுக்கும்,
காவல் ஆய்வாளர் .லதா தலைமையில் தங்கம்மாள் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் சுமார் 700 மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் வாணியம்பாடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் பாண்டியன், வாணியம்பாடி நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் . பிரேமா அவர்களின் தலைமையில் இஸ்லாமியா பெண்கள் மேல்நிலை பள்ளி வாணியம்பாடி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி நாட்றாம்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் சுமார் 750 மாணவர்களுக்கும், உமராபாத் காவல் ஆய்வாளர் யுவராணி தலைமையில் KAR பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் சுமார் 800 மாணவர்களுக்கும் பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.