நெல்லை மாநகரம் – பிப் -11,2023
Newz – webteam
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் நடைபெற்று வந்த குற்ற சம்பவங்கள் தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திருநெல்வேலி மாநகரம் உத்தரவின்படி காவல் துணை ஆணையாளர்கள் கிழக்கு மற்றும் மேற்கு ஆகியோர்களின் மேற்பார்வையின் கீழ் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படைகள் பெருமாள்புரம், மேலப்பாளையம், பேட்டை, TVMCH, ஆகிய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகளும் மற்றும் SSI. 4 பிராங்ளின் தலைமையில் ஒரு தனிப்படையும் நியமிக்கப்பட்டு பல்வேறு தொழில்நுட்ப உதவியோடு இரவு பகல் பாராமல் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தற்போது திருநெல்வேலி டவுண் செண்பகம் பிள்ளை தெருவில் குடியிருந்து வரும் ராஜேந்திரன் மகன் ஜெயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில் அவருடைய ஒப்புதல் வாக்குமூலத்தின்படி பெருமாள்புரம் காவல் நிலைய குற்ற எண் 16/2023 வழக்கில் திருடப்பட்ட நகைகள் சுமார் 49 பவுன் மற்றும் 27 லட்சம் ரொக்கமாக அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் திருடப்பட்ட நகைகள் என்று தெரிந்தும் வாங்கிய திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் பிரகாஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இருவரும் சட்ட உட்படுத்தப்பட்டுள்ளார்கள். ரீதியான நீதிமன்ற காவலுக்கு
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான ஜெயகுமார் த.பெ. ராஜேந்திரன் என்பவர் திருநெல்வேலி மாநகரம் பகுதிகளான பேட்டை, பாளையங்கோட்டை, பெருமாள்புரம், மேலப்பாளையம், திருநெல்வேலி மருத்துவகல்லூரி ஆகிய காவல் நிலையங்களில் சுமார்12 வழக்குகளில் தொடர்புடையது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும்
வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை
விசாரணை செய்து
வழக்கில் திருடப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள் கைப்பற்ற சட்டபடியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திருட்டை கண்டுபிடித்து பறிமுதல் செய்ய தனிப்படையினரை வெகுவாக பாராட்டினார் மேலும்
பொது மக்களுக்கு திருநெல்வேலி மாநகர காவல்
துறையினரின் வேண்டுகோள் வைத்திருப்தாவது
பொதுமக்கள் தங்களது குடியிருப்பு நலச்சங்கங்கள் மூலமாகவும் தனிப்பட்ட முறையிலும் தாங்கள் குடியிருக்கும் முக்கிய “பகுதிகளில் CCTV காமிரா அமைத்தும் பொதுமக்கள் தாங்கள் வெளியூர் செல்லும் போது தங்கள் வீடு பூட்டப்பட்டுள்ள விபரத்தை உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.