தூத்துக்குடி – பிப் -10,2023
Newz – webteam
தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான உடற் தகுதி தேர்வு மற்றும் உடற் திறனாய்வு தேர்வின் போது காவல்துறையினருக்கு உதவியாக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சான்றிதழ் வழங்கி பாராட்டு.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2022ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 27.11.2022 அன்று நடந்தது. இதில் தேர்ச்சி பெற்று தகுதியான விண்ணப்பதாரர்கள் 931 பேருக்கு உடற் தகுதி தேர்வு மற்றும் உடல் திறனாய்வு தேர்வு கடந்த 06.02.2023 அன்று முதல் இன்று (10.02.2023) வரை தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றுது.
மேற்படி தருவை மைதானத்தில் உடற் தகுதி தேர்வு மற்றும் உடற் திறனாய்வு தேர்வின் போது காவல்துறையினருக்கு உறுதுணையாக பணியாற்றிய மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் உட்பட உடற்கல்வி ஆசிரியர்கள் 20 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு கல்பனா, தூத்துக்குடி சத்தியராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு . சம்பத், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.