83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருடுபோன 11,லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் போலீசாரால்‌‌‌ மீட்பு மாவட்ட எஸ்பி...

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருடுபோன 11,லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் போலீசாரால்‌‌‌ மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்……

தூத்துக்குடி – ஜன – 02,2023

Newz – webteam

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 11,50,000/- மதிப்புள்ள 95 செல்போன்கள் மீட்பு – செல்போன்களை மீட்ட தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள்; தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர், அச்சுதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார்.

அதன்படி மேற்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களிடம் ஏற்கனவே மொத்தம் 680 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்டையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 11,50,000/- மதிப்புள்ள 95 செல்போன்களை கண்டு பிடித்து, அவற்றை பறிமுதல் செய்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், செல்போன்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக கையாளவேண்டும், பள்ளி குழந்தைகளுக்கு செல்போனில் ஆன்லைன் வகுப்பு பயிலும் போது அவற்றை கட்டுப்பாடுடன் கையாள்வதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும், மேலும் குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனுக்கு போன் லாக் தேவையில்லை, குழந்தைகளுக்கு பெற்றோருக்கு தெரியாமல் இரகசியங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை, அது பெற்றோர்கள் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும், செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும், அதற்கு அடிமையாகி பணத்தை இழந்து தங்கள் வாழ்க்கையை தொலைத்து தற்போது தற்கொலை செய்வது வரை நிகழ்ந்துள்ளது. ஆகவே ஆன்லைன் ரம்மி விளையாடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், முகம் தெரியாத நபர்களிடம் பழகி பின்னர் குற்ற நிழ்வுகள் நடக்க வழிவகை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்கள் செல்போனுக்கு வரும் OTPயை கொடுக்க வேண்டாம், வங்கி ஒருபோதும் உங்கள் OTPயை கேட்காது. உங்களுக்கு வரும் OTPயை யாரிடமும் பகிராதீர்கள், அதன் மூலம் உங்கள் பணம் ஏமாற்றப்பட்டு மோசடி நடைபெறும், சமூக வலைதளங்களில் வரும் வேலை வாய்ப்பு சம்மந்தமான செய்திகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இதுபோன்ற விழிப்புணர்வு குறும்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. மேலும் ‘மாற்றத்தை தேடி” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் காவல்துறையினர் பொதுமக்களிடையே நேரடியாக சென்று கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, ஆன்லைன் மோசடி போன்ற பல்வேறு விழிப்புணர்வு செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு இதுபோன்ற குற்ற நிகழ்வுகளில் இருந்து தற்காத்து கொண்டு தங்கள் பணத்தை பாதுகாத்து, பாதுகாப்பை மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

மேலும் இதுவரை ரூபாய் 79,50,000/- மதிப்புள்ள 775 காணாமல் போன் செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடித்த சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசாரை பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு. சுதாகர், அச்சுதன் உட்பட சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்