கன்னியாகுமரி – பிப் -23,2023
Newz – webteam
பெண்கள் பாதுகாப்புக்கு என்று தனி பெண் போலீஸ் அதிரடிப்படை உருவாக்கம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி
மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D. N. ஹரி கிரன் பிரசாத் IPS பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக முழுக்க பெண் போலீஸ் அதிகாரி, பெண் காவலர்கள் அடங்கிய அதிரடிப்படை ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடிப்படையானது பெண்கள் கூடும் இடங்களில் ஈவ்டீசிங் போன்ற பிரச்சனைகள் நடைபெறாமல் தடுக்கவும், செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும்,பெண்கள் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களின் போது பாதுகாப்பு அலுவலுக்கும் ஈடுபடுத்தபடுவார்கள். இந்த பெண்கள் அதிரடிப்படையானது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும்.