இராணிப்பேட்டை – பிப் – 08,2023
Newz – webteam
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று காலை சுமார் 10.00 மணியளவில் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக . கிரண் ஸ்ருதி இ.கா.ப., பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொறுப்பேற்ற பிறகு இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது……
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர். சைலேந்திர பாபு இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப.,தலைமையில் நடைபெற்றது.
இக்குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 21 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் இக்குறைதீர்ப்பு கூட்டத்தில் ஜானகி என்கின்ற 84 வயதான மூதாட்டி தன்னுடைய வீடு பிரச்சனை தொடர்பாக புகார் மனு அளிக்க வந்திருந்தார் அவரால் முதல் மாடியின் மீது ஏறி வந்து புகார் மனு அளிக்க முடியாத காரணத்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி மூதாட்டியிடம் சென்று புகார் மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பிவைத்தார்
மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசுவேசுவரய்யா (தலைமையிடம்), காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்