கன்னியாகுமரி – பிப் -21,2023
Newz – webteam
காவல் உட்கோட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . D. N. ஹரி கிரன் பிரசாத் IPS , மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மன அழுத்தம் இன்றி பணிபுரியவும், நோய் இன்றி உற்சாகமாக தங்களது பணிகளை சரியாக செய்யும் பொருட்டு பல்வேறு காவலர் நல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு காவலர்களுக்கு என விளையாட்டுப் போட்டிகள், மெகா மருத்துவ முகாம், நடைபெற்று இருந்தன. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் மாவட்டத்தின் உட்கோட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கிரிக்கெட், வாலிபால், கோ கோ,இறகுபந்து, வடமிழுத்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
அதன் தொடக்கமாக இன்று வடக்கு தாமரை குளம், மிரு கிரிக்கெட் மைதானத்தில் வைத்து காவல் உட்கோட்டங்களுக்கு இடையேயான 15 ஓவர் கிரிக்கெட் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் . ஈஸ்வரன், காவல்துணை கண்காணிப்பாளர்கள் ராஜா, கணேஷ், கிருஷ்ணமூர்த்தி, நவீன்குமார், மற்றும் அதிகாரிகள் காவலர்கள் கலந்து கொண்டனர்.