மதுரை – பிப் -08,2023
Newz – webteam
மதுரை மாவட்ட நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேனி நெடுஞ்சாலையில் சோலார் மூலம் இயங்கும் அதிநவீன சோதனைச் சாவடியை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் இ.கா.ப திறந்து வைத்தார்.
மதுரை மாவட்ட நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் மதுரை நகர் எல்லையை ஒட்டிய பல்வேறு பகுதிகளை புறநகரோடு இணைக்கிறது. இந்த காவல் நிலைய எல்லையை ஒட்டிய முக்கிய சாலையாக மதுரை தேசிய நெடுஞ்சாலைஉள்ளது. அண்டை மாநிலமான கேரளாவை மதுரை நகரோடு இணைக்கும் மிக முக்கியசாலையாகும்.
இந்த சாலையில் அச்சம்பத்துக்கு அருகில் நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையுடன் இணைக்கும் முக்கிய இடத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் சிவக்குமார் முயற்சியில் 100 சதவீத சோலார் வசதியுடன் இயங்கக்கூடிய புதிய நவீன சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.
இந்தச் சோதனை சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் இ.கா.ப அவர்கள் நேற்று மாலை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சமயநல்லூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் , நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் சிவக்குமார் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்து மணி சார்பு ஆய்வாளர்கள் வேல்பாண்டி, கணேஷ் குமார், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.