தூத்துக்குடி – பிப் -02,2023
Newz -webteam
மணியாச்சி மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று ஆய்வு.
மணியாச்சி மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுலவகங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், பதிவேடுகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.
மேலும் இந்த ஆய்வில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஷ்வரன், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், புளியம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.