தூத்துக்குடி – பிப் -19,2023
Newz – webteam
தூத்துக்குடியில் காவல்துறையினரின் வாகன தணிக்கை, பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணிகள் ஆகியவற்றை தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சைக்களில் ரோந்து சென்று திடீர் ஆய்வு.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்; கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் குறித்தும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் குறித்தும் மற்றும் வாகன சோதனைகள் மேற்கொள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டு தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போலீசாரின் ரோந்துப்பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் மீன்பிடித் துறைமுகம், ரோச் பூங்கா உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளில் ரோந்து சென்று ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார். மேலும் மத்தியபாகம் பாகம் காவல் நிலையத்திற்கும் திடீரென சென்று காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.