திருநெல்வேலி – பிப்-20,2023
Newz – webteam
ரேசன் அரிசி கடத்த முயன்றவர்களை துரிதமாக செயல்பட்டு தடுத்து அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த காவலருக்கு பாராட்டு.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக செல்வகுமார், என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 19.02.2023-ம் தேதி அன்று அதிகாலை 3 மணி அளவில் கோவில் பாதுகாப்பு பணிக்காக கல்லிடைக்குறிச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது வெள்ளாங்குழி அருகே வாகனத்தில் ஏதோ மூட்டைகளை ஏற்றுவது போல் தெரிந்ததை கண்டதும் சந்தேகமடைந்த காவலர் அருகே சென்று என்ன என்று கேட்டபோது மேற்படி நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பின்னர் வாகனத்தை சோதனை செய்த பார்த்த போது 750 கிலோ மதிப்பிலான 30 மூட்டை ரேசன் அரிசியை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. மேற்படி சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் முருகன், அவர்களுக்கு, தகவல் தெரிவித்ததன் பேரில் காவல் ஆய்வாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டு ரேசன் அரிசியையும் வாகனத்தையும் குடிமை பொருள் வழங்கல் பிரிவிடம் ஒப்படைத்தார்.
மேற்படி சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சரவணன், இ.கா.ப., ரேசன் அரிசியை கடந்த முயன்ற நபர்களை தடுத்து சிறப்பாக பணிபுரிந்த முதல் நிலை காவலர் செல்வகுமார், நேரில் அழைத்து மேற்படி சம்பவத்தை கேட்டறிந்து காவலரை பாராட்டி பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார். மேலும் காவலருக்கு வெகுமதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.