திருப்பத்தூர் – பிப் -09,2023
Newz – webteam
ஆம்பூர் உட்கோட்டம் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலை கிராமமான சுட்ட குண்டா மலைவாழ் மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S. பாலகிருஷ்ணன்., BVSc, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பேசுகையில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்துவது அல்லது வைத்திருந்தால் சட்டப்படி குற்றம் எனவும் அவ்வாறு உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை எவரேனும் வைத்திருந்தால் தாமாக முன்வந்து காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் தங்கள் குழந்தைகளை பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு இனிப்புகள் வழங்கி ஊக்குவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.