விழுப்புரம் – பிப் -15,2023
Newz – webteam
வடக்கு மண்டல காவல்துறை தலைவர் முனைவர் N.கண்ணன்.,IPS உத்தரவின் பேரில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா IPS., வழிகாட்டுதலின் படி
போக்குவரத்து விழிப்புணர்வு பற்றிய விழிப்புணர்வு வாரம் (TRAFFIC AWARENESS WEEK) கடந்த 13.02.2023ம் தேதி முதல் 18.02.2023ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று 15.02.2023 மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடம் மற்றும் விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் சாலை பாதுகாப்பு விதிகள், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பார்த்திபன் அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக ஆய்வாளர் வசந்த் மற்றும் காவல் ஆளிநர்கள் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பதாகைகள் ஏந்தியும் விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இருசக்கர வாகன பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா IPS., கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் தொடங்கி சிக்னல் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை ரயில் நிலையம் காமராஜர் வீதிகளின் வழியாக சென்று பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது.