தூத்துக்குடி – பிப் -18,2023
Newz – webteam
தூத்துக்குடி புனித அந்தோணி மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற நடனம், யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிசு வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டையாபுரம் ரோடு மச்சாதுநகர் பகுதியில் உள்ள புனித அந்தோணி மெட்ரிகுலேசன் பள்ளியில் இன்று பள்ளி மாணவர்களுக்கிடையேயான நடனம், யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் இந்த பள்ளியில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு பலர் வெற்றி பெற்றிருப்பீர்கள், சிலருக்கு வெற்றி கிடைக்காமல் இருக்கலாம், அவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டதே பெரிய வெற்றியாக கருத வேண்டும், இதுபோன்ற நடனம், யோகா, ஸ்கேட்டிங் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதன் மூலம் கிடைக்கும் சின்ன சின்ன ஊக்கங்கள் மாணவர்களாகிய உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும், மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் வெற்றியாளராக இருக்க வேண்டும், அதேபோன்று மாணவர்களாகிய நீங்கள் எந்த விஷயத்தில் சாதிக்க நினைக்கிறீர்களோ அதில் கவனம் செலுத்தினால் உங்கள் லட்சியத்தை அடைய முடியும் என்று கூறி தனது சிறப்புரை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் . பாலதண்டாயுதபாணி, புனித அந்தோணி பள்ளி தாளாளர் அனிதா ஜோசப் உட்பட ஆசிரியர்கள் மற்றும் பாலமுருகன், ஷேக் மைதீன், காந்தி கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.