திருப்பத்தூர் – பிப் -25,2023
Newz – webteam
திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது இதில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக Kabaddi, Badminton, Athletics, shotput, Long Jump போன்ற போட்டிகளில் மாவட்ட காவல்துறையினர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் வருகிற போட்டிகளில் வெற்றி பெற அறிவுரைகளை வழங்கி ஊக்குவித்தார்.