கோயம்புத்தூர் – பிப் – 23,2023
Newz – webteam
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் கங்கா நர்சிங் கல்லூரி (கங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ்) என்ற கல்லூரியில் மாணவர்கள் மேம்பாட்டு திட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் கல்லூரி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வுகளை எடுத்துக்கூறினார். மேலும் மாணவர்கள் சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அதில் வரும் நன்மை தீமைகளை பிரித்து பார்த்து நன்மைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு நல்வழிப் பாதையில் செல்ல வேண்டும் என்றும், இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல கூடாது நேர்மையாகவும் ஒழுக்கத்துடன் திறம்பட செயல்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.