விழுப்புரம் – பிப் -10,2023
Newz – webteam
அகில இந்திய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற விழுப்புர மாவட்ட காவல்துறையினர்
கடந்த 03.02. 2023 அன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளில் விழுப்புரம் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் கனகராஜ் மற்றும் ஆய்வாளர் முத்துக்குமரன் ஆகிய இருவரும் பங்கு பெற்று துணை காவல் கண்காணிப்பாளர் கனகராஜ் நீச்சல் போட்டியில் நான்கு (இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி) பதக்கங்களை பெற்றுள்ளார். ஆயுதப்படை ஆய்வாளர் முத்துக்குமரன் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் இடம் பெற்று தங்கம் பதக்கமும் பெற்றுள்ளார்.
மேற்கண்ட இருவரும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு IPS., அவர்களிடம் பதக்கங்களை காண்பித்து பாராட்டு பெற்று திரும்பினார்.
மேலும் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் பாண்டியன் IPS., அவர்களிடம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா IPS., அவர்களிடம் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.