திருவண்ணாமலை – பிப் -26,2023
Newz – webteam
Dr.M.S.முத்துசாமி,இ.கா.ப., காவல்துறை துணைதலைவர், வேலூர் சரகம் மற்றும் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர் திருவண்ணாமலை மாவட்டம் ஆகியோர் 24.02.2023-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு ரோந்து வாகன தணிக்கையின் போது சிறப்பான முறையில் பணி செய்து குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, குற்றவாளிகளிடமிருந்து ஒரு ஆயுதத்தையும் கைப்பற்றிய வெறையூர், ஆரணி நகரம் மற்றும் பாச்சல் ஆகிய காவல் நிலைய ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் அளித்து வெகுவாக பாராட்டினர்.