அரியலூர் – பிப் -02,2023
Newz – webteam
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு இ.கா.ப., துறைச் சார்ந்த பணியாக திருச்சி வந்திருந்தார்
அப்போது திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரின் பணி மென்மேலும் சிறக்க அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து , கஞ்சா மற்றும் பிற போதை பொருட்களை பறிமுதல் செய்தமைக்காகவும்,
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் முதல் நிலை காவலர் திருமதி.வனிதா அவர்கள் நீதிமன்ற அலுவலில் சிறப்பாக செயல்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு விரைவாக பணிபுரிந்தமைக்காகவும்,
செந்துறை காவல் நிலைய காவலர் .செந்தில் முருகன் அவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நான்கு முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு உதவி புரிந்தமைக்காகவும்,
மீன்சுருட்டி காவல் நிலைய காவலர் திரு.பிரபாகரன் அவர்கள் மீன்சுருட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தகவல் சேகரித்து னசிறப்பாக செயல்பட்டமைக்காகவும், இவர்கள் பணியை பாராட்டி தமிழக காவல்துறை இயக்குனர் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்கக்ள்.
இந்நிகழ்ச்சியின் போது திருச்சி மத்திய மண்டல ஐஜி க.கார்த்திகேயன் இ.கா.ப., அவர்கள் திருச்சி சரக டிஐஜி A.சரவணசுந்தர் இ.கா.ப.,மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா உடனிருந்தனர்.