கடலூர் – பிப் -21,2023
Newz – webteam
தேசிய மூத்தோர் தடகள ஒட்ட பந்தயம் 2023 மேற்கு வங்காளம் கல்கத்தா நகரில் உள்ள சாய் விளையாட்டு மைதானதில் 14.2.2023 முதல் 18.2.2023 வரை நடைபெற்றது. கடலூர் ஆயூத படை முதல் நிலை பெண் காவலர் A. சத்யா தமிழக தடகள அணியின் சார்பில் 4*100 தொடர் ஒட்ட பந்தயத்தில் பங்கேற்று இரண்டாம் பரிசு பெற்றார். கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் இ. கா. ப தேசிய மூத்தோர் தடகள பந்தயத்தில் இரண்டாம் பரிசு பெற்ற முதல் நிலை பெண் காவலர் A. சத்யா பாராட்டி வாழ்த்து தெரவித்தார்