கன்னியாகுமரி – பிப் -07,2023
Newz – webteam
சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் (Monthly Crime Meeting) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று (07.02.2022)நடைபெற்றது.
இதில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், அரசு குற்ற வழக்கறிஞர்கள், குழந்தைகள் நல அலுவலர், சுகாதாரத்துறை அலுவலர் , வட்டார போக்குவரத்து ஆய்வாளர், மின்சார துறை பொறியாளர் மற்றும் அனைத்து காவல்நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நீதிமன்ற நடைமுறைகளில் சிறப்பாக செயல்பட்டு கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் சிறந்த முறையில் பணியாற்றிய களியக்காவிளை சிறப்பு சார்பு ஆய்வாளர் எல்டர் லியோ மனோகர் பெண் தலைமை காவலர் சுஜிதாகுமாரி மற்றும் தலைமை காவலர் சசி
ஜனவரி மாதத்தில் குற்ற வழக்குகளில் சிறந்த முறையில் குற்றபத்திரிகை தாக்கல் செய்த பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளர் முத்துராஜ் நித்தரவிளை காவல் நிலைய ஆய்வாளர் அருள்பிரகாஷ் அவர்களுக்கும் மற்றும் மார்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினிஷ் பாபு
மாவட்ட ஆயுதப்படையில் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக பெண் காவலர்கள் ஷாலினா மற்றும் தன்யா ஆகியோருக்கும்
நீதிமன்ற நடைமுறைகளில் சிறந்த முறையில் பணியாற்றிய கன்னியாகுமரி காவல் நிலைய தலைமை காவலர் ஞானசேகர் அவர்களுக்கும்
CCTNS கணினி பிரிவில் சிறந்த முறையில் பணியாற்றிய மார்த்தாண்டம் காவல் நிலைய பெண் முதல் நிலை காவலர் ஜாஸ்மின் ஷீபா மற்றும் இரணியல் காவல் நிலைய பெண் தலைமை காவலர் மேரி ஜாயிஸ்
குற்றவழக்குகளில் ஈடுபட்டு நீதிமன்றங்களில் ஆஜரகாமல் இருந்த 46 பேருக்கு பிடியாணை(Non Bailable Warrant) நிறைவேற்றிய தக்கலை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மரிய அற்புதம் மற்றும் முதல் நிலை காவலர் . சைரஸ் ஆகியோருக்கும்
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்ததற்க்காக குலசேகரம் காவல் நிலைய தலைமை காவலர்கள் ஜெர்லின் ராஜ் மற்றும் அருள் சோனல் பிரதீப் அவர்களுக்கும்
கடத்தப்பட்ட குழந்தையை 2 மணி நேரத்தில் மீட்டு குற்றவாளியை கைது செய்த தக்கலை காவல் நிலைய ஆய்வாளர். நெப்போலியன், உதவி ஆய்வாளர் சத்தியசோபன்,தக்கலை உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் எபின், தலைமை காவலர் ஜோஸ் மற்றும் அவர்களுக்கும்
ஆயுள் தண்டனை பெற்று 8 வருடமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கண்டுபிடித்ததற்காக மார்த்தாண்டம் காவல் நிலைய தலைமை காவலர்கள் ராஜேஷ், அல்பான்ஸ் சுந்தர் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோருக்கும்
நாகர்கோயில் மகளிர் காவல் நிலைய வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து கொடுத்தற்காக வடசேரி தனிபிரிவு தலைமை காவலர் ஞான பிலிப்பு அவர்களுக்கும்
விஐபி பந்தோபஸ்த் போது சிறப்பாக பணியாற்றியதற்காக சிறப்பு சார்பு ஆய்வாளர். பசுபதி, கன்னியாகுமரி காவல் நிலைய தலைமை காவலர் பொன் அருள்ஜோதி அவர்களுக்கும்
கைரேகை பிரிவில் சிறந்த முறையில் குற்றவாளிகளின் கைரேகைகளை கண்டுபிடித்ததற்காக
கைரேகை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரெத்தின சேகர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் வினிதா, செல்வி.அமலா, சித்திரை செல்வன், ஜவஹர்லால் ஆகியோருக்கும்,
கஞ்சா தண்டனை குற்றவாளிகள் மீது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நன்னடத்தை பிணை பெற்றமைக்காக
தக்கலை காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் .பாலமுருகன் அவர்களுக்கும்
நகை திருடப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்து திருடப்பட்ட தங்க நகையை மீட்ட ராஜாக்கமங்கலம் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் கார்த்திக் அவர்களுக்கும்
மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக ராஜ் அவர்களுக்கும்
உங்களில் ஒருவன் என்ற விழிப்புணர்வு குறும்படத்தை காவல்துறையோடு இணைந்து எடுக்க உதவி செய்த . சகா சிவன், கெளதம் யோகேஷ் கிருஷ் மற்றும் எட்வின் விஜயகுமார் ஆகியோருக்கும்
பாராட்டு சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.