81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருச்சி திருச்சியில் மெச்சதகுந்த பணிக்காக 3,இன்ஸ்பெக்டர்கள் உட்பட 18,போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் முன்னிலையில் தமிழக கூடுதல் டிஜிபி...

திருச்சியில் மெச்சதகுந்த பணிக்காக 3,இன்ஸ்பெக்டர்கள் உட்பட 18,போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் முன்னிலையில் தமிழக கூடுதல் டிஜிபி பாராட்டு…

திருச்சி – பிப் -22,2023

Newz – webteam


தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் திருச்சி மாநகர காவல் நிலையங்களை பார்வையிட்டும், வன்முறை குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியும், சிறப்பாக பணிபுரிந்த காவல் குழுக்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்
தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் K.சங்கர், இ.கா.ப., திருச்சி மாநகரத்தில் உள்ள கண்டோன்மெண்ட் மற்றும் தில்லைநகர் ஆகிய காவல்நிலையங்களை பார்வையிட்டும், அங்கு வரவேற்பாளர்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்தும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் குறைகளை கேட்டறிந்தும், பின் தக்க அறிவுரைகளை வழங்கினார்
அதன்பின்னர், திருச்சி மாநகர காவல் ஆணையகர கூட்ட அரங்கத்தில் நடந்த பாரி குற்ற வழக்குகளான (GCR) ஆதாய கொலை, கொலை, வழிப்பறி, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் POCSO வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து கலந்துரயைாடினார். அவர்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் பேசுகையில், காவல்துறை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தான் உறுதுணையாக இருக்கும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள இழப்பீடு மற்றும் நிவாரண தொகைகள் பெற்று தரப்படும் என்றும், தங்களது குறைகளை காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்களை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம் என கூறினார்.
அதன்பின்னர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக காவல்துறையை மேம்படுத்தும் விதமாக E-Beat App பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், திருச்சி மாநகரத்தில் ரோந்து செய்யும் காவல் ஆளிநர்கள் மேற்கண்ட செயலிலை பயன்படுத்துவது மூலமாக திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பங்களை உடனுக்குடன் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனவும், இச்செயலி குறித்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்
மேலும் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எனவும், குற்றத்தடுப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், கஞ்சா மற்றும் போதை பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் எனவும், தமிழக முதலமைச்சரின் முதல்வரின் முகவரி மனுக்கள், பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் மனுக்களின் மீது தனிக்கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கினார்கள்.
திருச்சி மாநகரில் இந்த வருடம் 2023 ஜனவரி மாதம் பதிவான திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு, குற்றவாளிகளை விரைந்து கைது செய்தும், வழக்கின் சொத்துகளை மீட்டு மெச்சத்தகுந்த வகையில் சிறப்பாக பணியாற்றிய 3 ஆய்வாளர்கள், 1 உதவி ஆய்வாளர் மற்றும் 18 காவல் ஆளிநர்கள் உட்பட மொத்தம் 22 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்
இக்கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்பிரியா,
இ.கா.ப., மற்றும் காவல் துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு தலைமையிடம் ஆகியோர் கலந்து
கொண்டனர்‌‌‌

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்