சென்னை ஆவடி – பிப் -18,2023
Newz- webteam
திறன் மேம்பாட்டு திட்டம்”
சந்தீப் ராய் ரத்தோர்,இ.கா.ப., காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகம் உத்தரவுப்படியும் காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் விஜயகுமாரி,இ.கா.ப., அறிவுறுத்தலின்படி ஆவடி காவல் ஆணையரகத்தில் பணியாற்றுகின்ற ஆய்வாளர்கள் மற்றும் குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் அனைவருக்கும் “திறன் மேம்பாட்டு திட்டம் என்ற தலைப்பின் கீழ் நாளுக்கு நாள் பெருகி வருகின்ற குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டத்துடன் முரண்படுகின்ற குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையின்போது விசாரணை அதிகாரிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடைமுறைகள் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015, இச்சட்டத்தின் கீழ் பங்குதாரர்களின் கொள்கைகள், பொறுப்புகள் மற்றும் நோக்கங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தரும் சட்ட அமைப்புகள் மற்றும் குழந்தைகள் நலக்குழுவின் நடைமுறைகள் பற்றிய கருத்தரங்கு இன்று 18.02.2023ம் தேதி மாலை 14.00 மணிமுதல் 17.00 மணிவரை ஆவடி காவல் ஆணையரக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதி சுபத்ரா தேவி, அமர்வு நீதிபதி மற்றம் விரைவு மகிளா நீதிமன்றம், திருவள்ளூர் , R. வேல்ராஸ், திருவள்ளூர் மாவட்ட தலைமை நீதிதுறை நடுவர் , சாண்டில்யன், மூத்த சிவில் நீதிபதி, மாவட்ட சட்ட சேவை மையம், திருவள்ளூர், அவர்கள் மற்றும் முகிழாம்பிகை, முதன்மை நீதிபதி, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு , திருவள்ளூர், செல்வி. நான்சி தாமஸ், நிறுவனர், துளிர், அரசுசாரா அமைப்பு செல்வி. வித்யா ரெட்டி, நிறுவனர், அரசு சாரா அமைப்பு மற்றும் திருவள்ளூர் மாவட்ட தகுதிகாண் அலுவலர், சையது ராவூப், தகுதிகாண் சட்ட அலுவலர், . சங்கீதா மற்றும் மேரி ஆக்சிலா, குழந்தைகள் நலகுழு, திருவள்ளுர், டாக்டர். A.ராமன். குழந்தைகள் நல குழு, திருவள்ளூர் மாவட்டம் ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பாஸ்கரன், காவல் துணை ஆணையாளர், ஆவடி காவல் மாவட்டம் வரவேற்புரை வழங்கினார். விஜயகுமாரி, இ.கா.ப., காவல் கூடுதல் ஆணையாளர் தொடக்க உரையாற்றினார்.கெங்கைராஜ் காவல் கூடுதல் துணை ஆணையாளர், CWC, ஆவடி நன்றி உரை நிகழ்த்தினார்.